என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெல்லி கவர்னர்
நீங்கள் தேடியது "டெல்லி கவர்னர்"
டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba
புதுடெல்லி:
டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews

மாநில அரசு உரிமைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
சென்னை:
டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே கவர்னர் நடக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள கவர்னர்களும், குறிப்பாக தமிழக கவர்னர் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார். #Kejriwal #SheilaDikshit
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.
இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.
பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.
1998 முதல் 2013 வரை டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்த ஷீலா தீட்சித், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானுடன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கவர்னர் மற்றும் உயரதிகாரிகளுடன் அனுசரித்துப் போக தெரியாத கெஜ்ரிவால், தன்னிடம் முழு அதிகாரம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்காமல் மேம்பாட்டுப் பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என ஷீலா தீட்சித் அறிவுறுத்தினார்.
‘1998 முதல் 2003-ம் ஆண்டுவரை டெல்லி முதல் மந்திரியாக நான் பதவி வகித்த முதல் ஆட்சி காலத்தில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டெல்லி முதல் மந்திரியாக நான் பொறுப்பேற்றிருந்தபோது எரிசக்தி திறையை தனியார் மயமாக்கியது, டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுக்கு வாகனங்களை மாற்றியது மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எனது அரசு நிறைவேற்றியது.
எங்களுக்கும் பல தடைகள் இருந்தன. ஆனால், கவர்னருடன் மோதல் போக்கை கையாளாமல் டெல்லியின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபட்டோம்.
அரசை வழிநடத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை என்று கூறுவதன் மூலம் டெல்லி மண்ணின் மீதும் காவல் துறையிலும் தனக்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார். இருப்பினும், இதர துறைகளில் இந்த ஆம் ஆத்மி அரசு செய்துள்ள சாதனைகள் என்ன? என்பதையும் அவர் குறிப்பிட வேண்டும்.
கவர்னர் மற்றும் தலைமை செயலாளருடன் மோதல் போக்கை கடைபிடித்து, அரசின் துறை செயலாளர்களின் அலுவலகங்களை எல்லாம் பூட்டி வைத்து கொண்டால் எந்த அதிகாரி அவருடன் ஒத்துழைப்பார்? என்பதையும் கெஜ்ரிவால் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் மந்திரி கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது, இதற்கு முன்னர் நாம் காணாத நிகழ்ச்சியாகும். இதன்மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார்’ என்று ஷீலா தீட்சித் கூறினார். #Kejriwal #SheilaDikshit
×

X